கபே அமைப்பின் கலந்துரையாடல் .

தேர்தல் முறைமை சீர்திருத்தங்கள் தொடர்பான கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கும் CaFFE அமைப்பினால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களை சந்திக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு கட்டமாக, 18.09.2026 அன்று பெலவத்தையில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் செயலாளர் திரு. நிஹால் அபேசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. லக்ஷ்மன் நிபுண ஆரச்சி ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில்…

Read More

மட்டக்களப்பில் எல் நினோ பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் எல் நினோ பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று (17) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். சியாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்கும்…

Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரின் 26 ஆவது ஆண்டு ஞாபகார்த்த தின நிகழ்வு..

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் சட்ட முதுமாணி ரவூப் ஹகீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிதிகளாக கலந்துகொண்டனர். மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் சமூக, அரசியல் மற்றும் மக்கள்சார் பங்களிப்புகளை நினைவுகூரும் இந்நிகழ்வில் குர்ஆன் ஓதுதல், துஆப் பிரார்த்தனை மற்றும் இரங்கல் உரைகள் ஆகியவை இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரின் 26 ஆவது ஆண்டு ஞாபகார்த்த தின நிகழ்வில் கட்சியின் உயர்…

Read More

ஏறாவூர் றகுமானியா வித்தியாலய மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்தை பார்வையிட்டனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்காக இன்று (14) வருகை தந்தனர். ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியன இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தும் ‘Vision’ திட்டத் தொடருக்கு அமைவாகவே இப்பாடசாலைக்கு இச்சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றது. ஜனாதிபதி செயலக பழைய பாராளுமன்றக் கட்டிடத்தைப் பார்வையிட்ட பின்னர், பாராளுமன்ற வரலாறு குறித்து மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. இதன் போது மாணவர்கள்…

Read More

விவசாயிகள் பேரணியில் ஜனாதிபதி பங்கேற்பு.

இன்று (12) பொலன்னறுவையில் நடைபெற்ற ‘நமது அரசாங்கம்: ஈராண்டு ஆட்சி – நாட்டிற்கு மாட்சி’ விவசாயிகள் பேரணியில் ஜனாதிபதி கலந்துகொண்டபோது…

Read More

ஏறாவூர் மிச்நகர் குறுக்கு வீதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மிச்நகர் ஆயுள்வேத வைத்தியசாலை குறுக்கு வீதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று திங்கள்கிழமை(07)காலை மிச்நகர் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பிரதேச சபையின் உறுப்பினர் எம்.எச்.சபூர்தீன் தலைமையில் இடம்பெற்றது . வீதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகரசபையின் தவிசாளருமான எம்.எஸ்.நழீம்,ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளருமான முத்துப்பிள்ளை முரளிதரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். கௌரவ அதிதிகளாக ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உறுப்பினர்…

Read More

காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் “உள்ளுராட்சி வாரம் – 2026” முன்னெடுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.

“வளமான நாடு அழகான வாழ்வு – புனருதயே புரவர ‘புத்துயிர்க்கும் புது நகரம்’” எனும் தொனிப்பொருளின் கீழ், பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரின் சுற்றறிக்கைக்கு இணங்க, காத்தான்குடி நகர சபையினால் உள்ளுராட்சி வாரம் – 2026 எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மிகச் சிறப்பாக நடத்தப்படவுள்ளது. இது தொடர்பான ஆரம்பக் கட்டக் கலந்துரையாடல் இன்று (08.09.2026) செவ்வாய்க்கிழமை, காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில்…

Read More

தித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு புதிய வலைகள் வழங்கி வைப்பு.

தித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மீன்பிடி வலைகளை இழந்த திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கு புதிய வலைகள் வழங்கும் முதற்கட்ட நிகழ்ச்சி (02) ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசன் அக்மீமன அதிதியாக கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தார். தித்வா வெள்ளப் பெருக்கின் காரணமாக மீன்பிடி உபகரணங்களை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சுமார் 75 மீனவர்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் முதற்கட்டமாக 40 மீனவர்களுக்கு…

Read More

பாசிகுடாவில் கோலாகலமாக அரங்கேறிய பிரம்மாண்ட கடற்கரை விழா.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் (Sri Lanka Tourism Promotion Bureau) ஏற்பாட்டில், “Pasikuda 2026 – Where The Sea Celebrates” எனும் பிரம்மாண்ட கடற்கரை விழா (29 ஆகஸ்ட் 2026, சனிக்கிழமை) மாலை பாசிகுடா பொதுக் கடற்கரையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தார்.​இதன்போது இலங்கையின் தொன்மை மற்றும் கலாச்சாரப் பெருமையை வெளிப்படுத்தும் வண்ணமயமான நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன்​கடலோரப் பகுதியின் பாரம்பரிய மற்றும் சுவையான…

Read More

தோப்பூர் பொழுதுபோக்கு பூங்கா சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டது.

மூதூர் பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் தோப்பூர் பொழுதுபோக்கு பூங்கா, நேற்று சனிக்கிழமை (28) காலை சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டது. மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.டி.எம். தாஹிஸ் அவர்களின் பணிப்புரைக்கமைய, பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களால் இந்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.இதன்போது, பூங்கா வளாகம் முழுமையாக துப்புரவு செய்யப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தூய்மைப்படுத்தப்பட்டது. இந்த சிரமதானத்தில் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் எப். பாஹிம், தோப்பூர் உப அலுவலகப் பொறுப்பதிகாரி திருமதி…

Read More
Back To Top