

கூட்டுறவு உதவி ஆணையாளர் குழு விஜயம் .
கோறளை மத்தி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு கூட்டுறவு உதவி ஆணையாளர் தலைமையிலான குழு விஜயம் எஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.உசனார் தலைமையிலான மட்டக்களப்பு உதவி ஆணையாளர் அலுவலக தலைமை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.தயானந்தம், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.மங்களன், எஸ்.எம்.ஏ.ஹாதி, கணக்காய்வாளர் ஏ.எம்.அஜ்வத் ஆகியோர் நேற்று (22) கோறளைப்பற்று மத்தி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். சங்கத்தினுடைய தலைவர் எம்.எப்.எம் ஜெளபர், இயக்குனர் சபை உறுப்பினர்கள், பொது முகாமையாளர் மற்றும்…

விஷேட சந்திப்பு.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் விமானப்படை கட்டளை அதிகாரிக்குமிடையில் விசேட சந்திப்பு!! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கும் மட்டக்களப்பு விமானப்படையின் கட்டளை அதிகாரி குறூப் கப்டன் ரன் ரஜீவன அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. மட்டக்களப்பு திராய்மடுவிலுள்ள புதிய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த விசேட சந்திப் பின்போது மாவட்டத்தில் ஏற்படும் திடீர் அனர்த்த நிலைமைகளின் போதும் நோயுற்றுள்ள பொதுமக்களை அவசரமாக கொழும்பிற்கு கொண்டு…

சுகாதார அமைச்சர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் .
சுமார் 20 வருடங்களுக்கு முன் வைத்தியராகப் பணியாற்றிய, மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் Dr நளிந்த ஜயதிஸ்ஸ சில நாட்களுக்கு முன்னர், கண்காணிப்புச் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். தான் 20 வருடங்களுக்கு முன் பணியாற்றிய வைத்தியசாலைக்கு சென்றது ஒரு தனித்துவமான, அனுபவமாக இருந்ததாக அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி அமைச்சர் மஹர சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் .
மஹர சிறைச்சாலை வளாகத்திற்குள் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் நேற்று (14) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். முஸ்லிம் சிறைச்சாலை அதிகாரிகளின் மத அனுஸ்டானங்களுக்காக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தப் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது. மஹர சிறைச்சாலையைச் சுற்றி வசிக்கும் முஸ்லிம் சமூகத்தின் மத நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்ட இந்தப் பள்ளிவாசல், பாதுகாப்பு காரணங்களுக்காக 2019 முதல் மூடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் சுமார் 300 முஸ்லிம் குடும்பங்களுக்கு தமது…

வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் விஷேட செயற்திட்டம்.
போக்குவரத்து சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் முகமாக விழிப்புணர்வு செயற்திட்டம். விஷேட வேலைத்திட்டம் . உமர் அறபாத் -ஏறாவூர் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக துவிச்சக்கரவண்டிகளுக்கு இரவு வேளைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம் செங்கலடி பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி JSA.ஜயலத் உட்பட பொலிஸ்…

ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவனினால் புதிய கண்டுபிடிப்பு.
பார்வையற்றோருக்கான அரிய சாதனத்தைக் கண்டுபிடித்த ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் அன்சக் அஹமட் . (SMM.முர்சித்) பார்வையற்றோர் சுமார் 1/2 மீற்றர் தூரத்திலுள்ள பாதிப்பு தரும் ஒலி எழுப்புவதனூடாக பொருளைக் கண்டறியக்கூடிய Smart Blind Stick என்ற அரிய சாதனமொன்றை ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் தரம் 9E இல் கல்வி பயிலும் மாணவன் நபவி அன்சக் அஹமட் கண்டுபிடித்துள்ளார். இவர் ஓட்டமாவடி-01 ஐச்சேர்ந்த எம்.ஐ.நபவி மற்றும் மீராவோடை அமீர் அலி வித்தியாலய அபிவிருத்தி உத்தியோகத்தர்…

காரைதீவு தவிசாளருடன் சந்திப்பு .
காரைதீவு தவிசாளரை சந்தித்த மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் – பிரதேச மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த சபை ! மாளிகைக்காடு செய்தியாளர் மாளிகைக்காடு பிரதேச மக்களின் பிரச்சினைகளை ஆராய மாளிகைக்காடு மக்களின் சார்பில் மாளிகைக்காடு தலைமை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்களுக்கும் காரைதீவு பிரதேச சபை தவிசாளருக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று காரைதீவு பிரதேச சபையில் இடம்பெற்றது. மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் செயலாளர் நூருல் ஹுதா உமரின் நெறிப்படுத்தலில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ….

குளத்தில் தவறி விழுந்த மாணவன் சடலமாக மீட்பு.
ஹட்டன் சிங்கமலை குளத்தில் விழுந்த மாணவனின் சடலம் மீட்பு. ஹட்டன் சிங்கமலை பகுதயில் உள்ள நீர் தேக்கத்தில் தவறி விழுந்த மாணவன் இன்று (09) நீர்தேக்கத்தில் இருந்து கடற்படையினரின் உதவியோடு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் 17 வயது மாணவன் நேற்று மாலை மூழ்கி காணமல் போயிருந்தார். இந்த ஆண்டு O/L பரீட்சையை முடித்துவிட்டு, முடிவுகளுக்காகக் காத்திருக்கும் 6 மாணவர்கள், கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, ஹட்டனில்…

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு ஏர் கேர்டைன் வழங்கி வைப்பு.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கல்குடா டைவர்ஸினால் Air Curtain கையளிப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவுப்பொறுப்பாளர் தாதிய உத்தியோகத்தர் எம்.ஐ.ஏ.அஸீஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேபைப்பிரிவினால் அவசர சிகிச்சைப்பிரிவுக்கு மிக அவசியத்தேவையாகக் காணப்பட்ட குளிரூட்டிக்குத் தேவையான Air Curtain வைத்தியசாலை அத்தியட்சகர் Dr எஃப்.பி.மதன் அவர்களிடம் நேற்று 09.07.2025ம் திகதி புதன்கிழமை கையளிக்கப்பட்டது. வைத்தியசாலை அத்தியட்சகர் Dr எஃப்.பி.மதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த Air Curtain கையளிக்கும் நிகழ்வில் அவசர…

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு வீதி பவணி.
கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படும் “சூழல் உணர்வுமிக்க சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கல்விச் சுற்றாடலை நிர்மாணித்தல்” எனும் தொனிப்பொருளில் ஏறாவூர் அல் -அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையினால் போதைப்பாவனை மூலம் ஏற்படும் தீங்குகள் மற்றும் கொடிய டெங்கு நோயின் பாதிப்புக்களை வெளிப்படுத்தும் வீதி விழிப்புணர்வு பவணி மாணவிகளினால் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் SMM.நவாஸ் தலைமையின் கீழ் பாடசாலை வளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டதுடன் “சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்…